காரியனேந்தல் பேருந்து நிறுத்த பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இருவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா தோணுக்கால் பகுதியைச் சார்ந்தவர் அழகு பெருமாள் இவர் தனது நண்பர் சந்திரசேகர் உடன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு
கடைக்கு சென்று விட்டு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரியனேந்தல் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத கார் அதிவேகமாக வந்து அழகு பெருமாள் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் அழகு பெருமாள் மற்றும் உடன் வந்த சந்திரசேகரன் காயம் அடைந்த நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்