விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 1933ம் ஆண்டுக்கு முன்பாக சாத்தூர் தாலுகா சூரன்குடி கிராம கணக்கில் கோட்டை சூரங்குடி என்ற கிராமம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோட்டை சூரங்குடி யில் உள்ள நத்தம் புறம் போக்கு நிலத்தில் பலர் வசித்து வந்ததாகவும் 1933 பிறகு இடம் பெயர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாத்தூரில் தமிழக அரசே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு நடவடிக்கை எடு எனவும் சிட்டிசன் சினிமா படப்பாணியில் 1933 வைப்பாற்று வெள்ளத்தில் சாத்தூர் தாலுகா சூரன்குடி கிராம கணக்கில் கோட்டை சூரங்குடி கிராமத்தை காணவில்லை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத சம்மந்தப்பட்ட சாத்தூர் ஆர். டி. ஓ மற்றும் தாசில்தார் மற்றும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடு இப்படிக்கு கோட்டை சூரங்குடியில் வாழ்ந்த 18 சமுதாய வாரிசுதாரர்கள் என்ற பெயரில் போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 1933ம் ஆண்டுக்குப் பின்னர் கோட்டை சூரங்குடி கிராமத்தை காணவில்லை என சங்கரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த கருப்பசாமி என்பவர் வட்டாட்சியர் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோட்டை சூரங்குடியில் வாழ்ந்த 18 சமுதாய வாரிசுகள் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது