விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் விருதுநகர் மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஆகியோர் தலைமை தாங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது 100 நாள் வேலை திட்டத்தில் சுமார் 4434 கோடி தர மறுக்கும் மோடியை கண்டித்தும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் மோடியின் ஆட்சியினை கண்டித்தும் வெள்ளம் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி பேரிடர் நிதியினை தர மறுக்கும் மோடியை கண்டித்தும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்து விட்டு தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியையும் தர மறுக்கும் மோடி மற்றும் நிதி அமைச்சகத்தை கண்டித்தும் மும்மொழி கல்வி கொள்கை எனும் பெயரில் தமிழகத்தில் இந்தி திணிக்கும் முயற்சியை செய்யும் மோடியின் பாஜக அரசை கண்டித்தும் வக்பு வாரிய சட்ட மசோதா என்னும் புதிய சட்டத்தை அமல்படுத்தி இந்திய மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகள் பிரிவினைவாத மோடி அரசை கண்டித்தும் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.