சாத்தூர்: இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை

63பார்த்தது
சாத்தூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்தது. கோடைகாலம் தொடங்கியதிலிருந்து சாத்தூர் பகுதிகளில் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைவாக இருந்து வருவதுடன் அவ்வப்போது பரவலாக சாரல் மழையும் பெய்து வந்தது. இன்று காலையிலிருந்து வழக்கமான வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென்று பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது. சாத்தூர் நகரப்பகுதி, புறநகரப்பகுதி, மேட்டுமலை, மீனம்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. திடீரென்று பெய்த மழையால் வெட்கை தணிந்து குளிர்ச்சியான காற்று வீசிவருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி