டூவீலர் திருட்டு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை

58பார்த்தது
*சாத்தூரில் இருசக்கர வாகனத் திருட்டு;சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். *

சாத்தூர் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு
சாத்தூர் குருலிங்காபுரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர்க்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை கடந்த 1ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு மறுநாள் காலை சென்று பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வசந்தகுமார் புகார் அளித்ததன் மூலம் திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் வசந்தகுமாரின் வாகனத்தை இரண்டு மர்ம நபர்கள் இரவில் திருடி சென்ற சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி