அதிமுக ஜெயபெருமாளின் தந்தை பால்ச்சாமி நினைவு தினம்.

79பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சித்தனேந்தல் பகுதியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவரும், இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ஜெயபெருமாளின் தந்தை பால்ச்சாமி அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பால்ச்சாமி - ராஜம்மாள் தகவல், உதவி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய பொதுமக்களின் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், 98 பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் 86 கல்லூரி மாணவ, மாணவிகள் என மொத்தம் 184 பேருக்கு ரூ. 19 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்களின் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் விழாவினை அதிமுக அவைத்தலைவர் ஜெயபெருமாள், அவரது சகோதரர் காஞ்சிபுரம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி