விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ. 69 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 2. 76 இலட்சம் மதிப்பிலான செயற்கை கால்களையும்,
திருச்சுழி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் 2024-25-ன் கீழ் 23 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ. 12. 10 இலட்சம் மதிப்பிலான பால் பரிசோதனை கருவிகள், ரூ. 4. 18 இலட்;சம் மதிப்பிலான அலுமினிய பால் கேன்கள் மற்றும் ரூ. 22 ஆயிரம் மதிப்பலான பால் அளவைக் கருவிகள் என மொத்தம் ரூ. 16. 50 இலட்சம் மதிப்பிலான கருவிகளையும்
என ஆக மொத்தம் ரூ. 19. 26 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.