சாத்தூர் அருகே பட்டாசு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம். சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையை சேர்ந்தவர் சித்தாராமன் என்பவரின் மகன் கருப்பசாமி (23). இவர் அருகில் இருக்கும் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணியாற்றினார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும்
கூறப்படுகிறது. இந்த நிலையில் கருப்பசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி பிரியா அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.