புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் திட்டங்கள் விண்ணப்பிக்கலாம்

66பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டம், கொல்லைபுற மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு பயனாளிகளுக்கு செலவினத்தொகை ரூ. 7, 00, 000-ல் 60 சதவீதம் மானியமாக ரூ. 4, 20, 000- வழங்கப்படும் திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்பு நிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் 114, B 27-1, வேல்சாமி நகர், என்ற முகவரியில் இயங்கிவரும் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண். 04562 - 244707 தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி