*சாத்தூரில் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்*
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழக வெற்றிக் கழகம் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் சின்னப்பர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்பாட்டத்தின் போது பிஜேபி அரசு சிறுபான்மையினர் மத்தியில் பயத்தை உருவாக்கும் வகையிலும் அனைத்து மதத்தினருக்கும் ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையிலும் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறும் வரை தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என ஆர்ப்பாட்டத்தின் போது கோஷம் எழுப்பினர்.
மேலும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சாத்தூர் வெம்பக்கோட்டை அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.