இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தவறி கீழே விழுந்த விபத்தில் சிகிச்சை பலனின்றி பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரியை சேர்ந்த அஷ்ரப் என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் அஷ்ரப் உயிரிழந்த நிலையில் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அசரப்பின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் சாத்தூர் தாலுகா காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.