*விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்*
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில், 22 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அகழ்வாய்வில் இதுவரை சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் குவளைகள், சூது பவள மணி, உள்ளிட்டவை என 4, 400-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் அகழ்வாய்வில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து தொல்லியல் அகழ்வாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர், மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணியில். மொத்தமாக 4400-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வில், 13 சென்டிமீட்டர் ஆழத்தில் 29. 5 மில்லி மீட்டர் நீளமும், 6. 6 மில்லி மீட்டர் சுற்றளவும், 2. 64 மில்லி கிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கிடைக்கப்பெற்றுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.