இராசபாளையம் - Rajapalayam

இராஜபாளையம்: காட்டாறு வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு...

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவார ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கே குளித்துக் கொண்டிருந்த இருவர் ஆற்றின் மறுகரையில் சிக்கிய நபர்களை வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே அம்மையப்பரத்தை சேர்ந்த தையல் கலைஞர்களான கோடீஸ்வரன் மற்றும் வெள்ளை துரை ஆகியோர் காலை வேலை முடிந்த பின் சாஸ்தா கோயில் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். வனப்பகுதிக்கு வெளியே சாஸ்தா அணைக்க செல்லும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மலை மீது க மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டன. இதனால் அவசரகதியில் ஆற்றின் மறுபுறம் கரையேறினர். நேரம் செல்ல, செல்ல தண்ணீர் வரத்து அதிகமானதை தொடர்ந்து அருகில் இருந்த தோப்பு ஊழியர்கள் மூலம் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றின் மறு கரையில் கயிறு கட்டி சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Nov 05, 2024, 15:11 IST/சாத்தூர்
சாத்தூர்

சாத்துார்: மயங்கி விழுந்து சிறுவன் பலி

Nov 05, 2024, 15:11 IST
சாத்தூர் அருகே மயங்கி விழுந்த சிறுவன் சாவு. போலீஸ் விசாரணை. விருதுநகர் மாவட்டம், சாத்துார் காவல் சரகத்துக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே உள்ள வாகைகுளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் சரவணன் (வயது 9). இவர் நடந்து செல்லும் போது திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். உடனே அவனை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் சிகிச்சை அளித்தனர்.  மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த சிறுவன் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்