சிவகாசி அருகே சரக்கு வாகனம் திருட்டு. திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடும் போலீஸ்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு சொந்தமான சரக்கு வானத்தை தனது வீட்டின் அருகில் நிறுத்தி விட்டு திருப்பதிக்கு சென்றார். தனது செல்போன் மூலம் வீட்டை கண்காணித்த போது அங்கு நிறுத்தி வைத்து விட்டு வந்த சரக்கு வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தனது உறவினர் பிரசன்னகுமார் (37) என்பவருக்கு தகவல் தெரிவித்து போலீசில் புகார் கொடுக்க வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து பிரசன்னகுமார் சரக்கு வாகனம் மாயமானது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வாகனத்தை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.