குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்காக இந்தியா முழுவதும் சிவகாசியிலிருந்து பட்டாசு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் 3000 பட்டாசு கடைகளில் கடந்த 2 வாரமாக தீபாவளி பட்டாசு விற்பனை களைகட்டியது. தமிழகத்தின் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் பட்டாசு வாங்க குவிந்தனர். இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி குறைவு என்பதால் கடைசி நேரத்தில் பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வானில் வர்ண ஜாலம் காட்டும் பேன்சி ரக பட்டாசுகளுக்கு கடைசி நேரத்தில் கடும் தட்டுப்பாடு நிலவியது.