இராஜபாளையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது. லாட்டரி சீட்டு மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட புனல்வேலி பேருந்து நிறுத்ததில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக தளவாய்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்ககு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீஸார் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.