இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் உள்பட 2 பேர் கைது. கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளி அருகே இருக்கும் பேருந்து நிலையம் முன்பாக கஞ்சா விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேலும் தகவல் பேரில் சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில் சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த சந்தானம் 47, மற்றும் முகேஷ் 19, ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, தளவாய்புரம் காவல் நிலையத்தில் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.