சிவகாசி அருகே திருத்தங்கலில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. 115 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியில் செயல்பட்டு வரும் பள்ளியின் பின்புறமாக போதை பொருளான கஞ்சா விற்பனை செய்வதாக திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். சோதனையில் மாட வீதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 115 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.