இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சொக்கநாதனபுத்துார் வடகாசி அம்மன் கோவிலின் பின்புறம் கஞ்சா விற்பனை செய்வதாக சேத்துார் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் மனோகரன் தலைமையில் போலீஸார் நேரில் சென்று சோதனை செய்தனர். மேலும் சோதனையில் அதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.