இராஜ: நிதி நிறுவனம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல்...

85பார்த்தது
ராஜபாளையம் அதிக பணம் தருவதாக கூறி கிராம மக்களிடம் ஒரு கோடி மோசடி செய்த நிறுவனம்.
பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சுற்றி உள்ள கிராம மக்களிடம் கோவையை தலைமை இடமாகக் கொண்டு மோகன்ராஜ் என்பவர் நடத்தி வரும் நேரடி விற்பனை நிலையம். இங்கு குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாகவும், உறுப்பினர்களை இணைத்தால் அதிக பணம் தருவதாகவும் விளம்பரப்படுத்தி உள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள் சிலர் கடந்தாண்டு நிறுவனம் சார்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் நிறுவனத்தின் பிரதிநிதிகளாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட மகேஸ்வரன் மற்றும் அனிதா ஆகியோர் ரூபாய் 10, 000 மற்றும் ரூ 50, 000 கட்டி அடையாள அட்டை வாங்கும் நபர்களுக்கு வாரம் ரூ 1000 முதல் ரூ 5000 தொடர்ச்சியாக வழங்கப்படும் என்றனர். இதனை நம்பிய கிராம மக்கள் பணம் கட்டி உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு சில வாரங்கள் மட்டுமே பணத்தை வழங்கி உள்ளது. இதில் பெரும்பாலானோர் விதவை மற்றும் கணவனால் கை விடப்பட் டு பெண்கள் தான் அதிகம். இந்த நிலையில் சில மாதங்களுக்கு பிறகு பணம் வழங்குவதை நிறுத்திவிட்டு ‍வெளியூர் சென்றுவிட்டனர். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிராம மக்கள், நிறுவன பிரதிநிதிகள் மகேஸ்வரன், அனிதா ஆகியோரை பிடித்து பணத்தை திரும்ப பெற கேட்டு வடக்கு காவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி