காணாமல் போன டாட்டா ஏசி வாட்டர் வாகனத்தை கண்டுபிடித்து தரக் கோரி காவல் நிலையத்தில் புகார் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வசித்து வருபவர் லிங்காசாமி இவர் வாட்டர் கம்பெனி வைத்து தொழில் செய்து வருவதாகவும், நிலையில் காரியாபட்டி கள்ளிக்குடி சாலையில் தனது டாட்டா ஏசி வாட்டர் வாகனம் ரூ.1,25,000 மதிப்பிலான வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றதாகவும், மீண்டும் மறுநாள் காலை வந்து பார்த்தபொழுது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி, காணாமல் போன தனது வாகனத்தை கண்டுபிடித்து தரக்கோரி காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.