சிவகாசி சாலையில் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஒருவர் காயம் விருதுநகர் வடமலைகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் இவர் தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜாகிர் உசேன் என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றதாகவும் திடீரென எந்தவித சிக்னலும் செய்யாமல் ஆட்டோவை திருப்பியதன் காரணமாக பாண்டியராஜனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாண்டியராஜன் காயமடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அம்பத்தூர் காவல் நிலையத்தில் பாண்டியராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.