விமான நிலையத்தில் புதுமண பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நகைகளை ஒப்படைக்குமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா என்ற பெண், 2023ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இலங்கையிலிருந்து சென்னை திரும்பிய தனுஷிகாவிடம் தாலி சங்கிலி, வளையல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த விசாரணையில், நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது.