பெங்களூவில் ஸ்விக்கி டெலிவரியில் இருந்து பேசுவதாக பெண் ஒருவருக்கு கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர், உங்களுக்கு ஒரு ஆர்டர் வந்துள்ளது, கதவை திறங்க மேடம் என கூறியுள்ளார். அந்நேரத்தில் அப்பெண் வீட்டில் இல்லாததால் கதவுக்கு வெளியே ஆர்டரை வைக்க சொல்லியுள்ளார். பின்னர் பார்த்தபோது அதுபோன்ற எந்தவொரு ஆர்டரும் கதவு அருகே இல்லை. ஆர்டர் வந்ததாக பொய்யாக கூறி கதவை திறக்க வைக்க அந்த மர்ம நபர் போட்ட திட்டம் இது. பல விதமான மோசடிகள் நடைபெறுவதால் கொஞ்சம் கவனமாக இருங்க மக்களே!