விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் கடந்த 14-ந் தேதி மங்காபுரம் தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 30) என்பவரை அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 4 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ராஜவேல்பாண்டி (26), சித்தார்த் (21), ஜெய்கணேஷ் (26) ஆகிய 3 பேரையும் தெற்கு போலீசார் கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.