இராஜபாளையம்: ரூ. 5 கோடி ஏப்பம்; மக்கள் பரிதவிப்பு...

57பார்த்தது
இராஜபாளையத்தில் பிரியாணி என்ற பெயரில் 250 பேரிடம் ரூ. 15 கோடி மோசடி. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் கங்காதரன், இவர் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபலமான பெயரில் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும், அதற்கு தமிழகம் முழுவதும் கிளைகள் திறக்க உள்ளதாகவும் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த 239 பேர் தங்கள் பகுதியில் பிரியாணி கடை திறப்பதற்காக தொடர்பு கொண்டனர். 

இவர்களிடம் கங்காதரன், பொருட்கள், கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக மொத்தம் ரூ. 15 கோடி வரை வாங்கியதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் மட்டும் திறக்கப்பட்ட கடைகள் சிறிது காலத்தில் மூடப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட கங்காதரன், தன்னை நீதிமன்ற வழக்கு மூலம் மட்டுமே விசாரணை செய்ய வேண்டும் என ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கின் விபரம் குறித்து பாதிக்கப்பட்ட 239 பேருக்கும் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் வழக்கு தொடர்ந்த கங்காதரன் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் நீதிமன்ற வாயில் அருகே திரண்டு, கங்காதரனை கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி