விருதுநகர் மல்லாங்கிணறு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமத்தூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு பெரியசாமி மற்றும் பொண்ணு பாண்டி ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இது அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.