விக்கிரவாண்டி - Vikravandi

தனியார் நிறுவனத்தை திறக்க வேண்டி மனுஅளித்த ஊழியர்கள்

தனியார் நிறுவனத்தை திறக்க வேண்டி மனுஅளித்த ஊழியர்கள்

விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு கிராமத்தில், மருத்துவமனை கழிவுகளை சுத்திகரிக்கும் தனியார் தொழிற்சாலை கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்ட தொழிலாளர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில், மருத்துவ கழிவுகளை எரிப்பதால் சுற்றுசூழல், குடிநீர் பாதிப்பும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் 20 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், கடந்த ஏப்ரல் 22ம் தேதி அந்த தொழிற்சாலையை தற்காலிகமாக மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில், தொழிற்சாலை மேலாளர் சந்தியா, மேற்பார்வையாளர் சிலம்பரசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு அளித்தனர்.

வீடியோஸ்