வளவனுார் அடுத்த பூவரசங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகள் திவ்யலோஷனி, 16; கோலியனுார் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 25ம் தேதி பள்ளிக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.