கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருக்கோவிலூர் அத்தண்டமருதூர் பகுதியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் ஏமப்பேர் பகுதி வரை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டு சிதலமடைந்தது. இதன் காரணமாக அணைக்கட்டு திருக்கோவிலூர் அத்தண்டமருதூர் பகுதியில் புனரமைக்கவும் விழுப்புரம் மாவட்டம் ஏமப்பேர் பகுதியில் கூடுதலாக 300 மீட்டர் அளவில் கூடுதலாகவும் இணைத்து அணைக்கட்டு கட்டவும் 130 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிலையில் இன்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பொன்முடி சிதலமடைந்த அணைக்கட்டை பார்வையிட்டு அங்கிருந்த அரசு துறை அதிகாரிகளிடம் அணைக்கட்டு புதிதாக புனரமைக்கப்படும் போது அதில் வாகன போக்குவரத்துக்கு ஏதுவாக ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு மக்கள் செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் உடன் இருந்தனர்.