விழுப்புரத்தில் மதுபாட்டில் விற்பனை செய்தவர்கள் கைது

65பார்த்தது
விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையிலான போலீசார், ஜி. ஆர். பி. , தெருவில் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் ராஜா (எ) ஒடுக்கு ராஜா, 40; பாலு மகன் உதயகுமார், 40; நாராயணன் மகன் முத்துவேல், 42; என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள், அப்பகுதியில் புதுச்சேரி மதுபானங்களை வாங்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. உடன் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, 148 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி