வளவனூர் அருகே இளம்பெண் மாயம்

55பார்த்தது
வளவனுார் அடுத்த சின்னகொங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகள் சாருமதி, 21; பி.காம் வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோதண்டராமன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி