சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி 100 அடி சாலையில் மனோஜ் என்ற
இளைஞரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
மனோஜ் உடன் வந்த அவரது நண்பர்கள் இருவர் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஈரோட்டில் ரவுடி ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், தினந்தோறும் கொலை நடக்கும் கொலை சம்பவங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.