புதுச்சேரி அடுத்த காட்டேரிகுப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் ராஜேஷ், 31; திருமணமாகாதவர். இவரது சிறுவயதில் பெற்றோர் இறந்ததால், சித்தப்பா பெத்தநாயுடு பராமரிப்பில் வளர்ந்தார். குடிபோதைக்கு அடிமையானதால் கடந்த மாதம் 25ம் தேதி, விழுப்புரம் அடுத்த பனங்குப்பத்தில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில், சேர்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று, மையத்தில் திடீரென ராஜேஷ் மயங்கி விழுந்தார். அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ராஜேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பெத்தநாயுடு அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.