அடர்ந்த மரங்கள் கொண்ட நிலப்பகுதிகள் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. உலகின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பகுதி காடுகளாக உள்ளன. பல உயிரினங்களுக்கு இவை புகலிடமாக விளங்குகின்றன. அது மட்டும் இல்லாது புவி வெப்பமடைதல், ஆக்ஸிஜன் வழங்குதல், காற்றை சுத்தப்படுத்துதல், மண் அரிப்பை தடுத்தல், இயற்கை சீற்றங்களை கட்டுப்படுத்துதல் போன்று பல பணிகளை காடுகள் செய்து மனிதர்களுக்கு பெரும் பங்காற்றுகின்றன.