தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி அருகே கடந்த மாதம் 16ஆம் தேதி, கார் ஒன்று 2 வயது குழந்தை மீது ஏறி இறங்கியது. இதில், படுகாயமடைந்த அந்த குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (மார்ச் 20) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. சாலையின் நடுவே குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அதனை கவனிக்காமல் ஒருவர் தனது காரை குழந்தை மீது ஏற்றினார். உடனே அருகில் இருந்தவர்கள் காரின் நடுவே சிக்கிய குழந்தையை மீட்டனர்.