மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் மூதாட்டி ஒருவர் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர், கீழவாசல் பகுதி வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். உடனடியாக அவர் இறங்கிய பேருந்தின் முன்பாக சென்ற சாலையை கடக்க முயன்றார். இதனை கவனிக்காத பேருந்து ஓட்டுநர், மூதாட்டி மீது மோதினார். இதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று (மார்ச் 21) காலை 6 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.