தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு, துறை அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர். அந்த வகையில், இன்று (மார்ச் 21) முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், "கேள்விகளும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்” என உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.