தெற்கு வங்க கடலில் உருவாகும் காற்றின் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் நண்பகல் 12 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.