திருக்கோவிலூர் - Tirukoilur

தூங்கி கொண்டிருந்த இளைஞரை வெட்டிய போலீஸ்காரர் கைது

தூங்கி கொண்டிருந்த இளைஞரை வெட்டிய போலீஸ்காரர் கைது

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்தவரான சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றும், ராமசாமி மகன் முரளி, (40), ஆறுமுகம் மகன் ராஜிவ்காந்தி ஆகியோர்களுக்குள் இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக முரளி, இவரது அண்ணன் தயாளன் (45) ராஜிவ்காந்தி, ஆகியோர், செப்டம்பர் 8ஆம் தேதி நள்ளிரவில் ராஜேந்திரன் வீட்டில் புகுந்து, அங்கு துாங்கிக் கொண்டிருந்த அவரது மகன் தனுஷ், (23) தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.அதில் படுகாயமடைந்த தனுஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து, ராஜிவ்காந்தி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று (செப்.,16) போலீஸ்காரர் முரளியை இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது கைது செய்தனர்.

வீடியோஸ்


விழுப்புரம்