தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் போன்ற பழங்களில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். எனினும் இவற்றை சாப்பிட்ட பிறகு உடனடியாக தண்ணீர் பருகுவது செரிமானத்தில் தலையிடலாம். இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. இதை உண்ட பின் தண்ணீர் பருகினால் அது புரோட்டீனை உடைக்க வயிற்றில் சுரக்கப்பட்ட அமிலத்தை கரைக்கும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதால் வயிறு விரிந்து அசௌகரியம் உண்டாகும்.