காலையில் தினமும் 5 முதல் 6 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை தியானம் செய்தால் நல்ல பயன்கள் கிடைக்கும். தியானம் செய்யும் போது கண்களை மூடிக் கொண்டு, நம்முடைய கஷ்டங்களை மறந்து உங்களுக்கு பிடித்த தெய்வத்தை நினைத்து வழிபடலாம். தியானம் நாம் கற்றுக் கொள்ளும் ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள திசுக்களைப் பாதுகாத்து, இதயம் தொடர்பான நோய்களை அண்ட விடாமல் தடுக்கிறது.