ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சேதத்தை சரி செய்ய ரூ.2,000 கோடி வேண்டும் எனக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தமிழக முதல்வரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் தமிழகத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.