திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (டிச. 04) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக டிச. 13 (10-ம் நாள் விழா) கோயில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.