திருக்கோவிலுார்: மின்சாரம் தாக்கி முதியவர் சாவு

60பார்த்தது
திருக்கோவிலுார் அடுத்த ராஜம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, (69); கடந்த 12ம் தேதி மாலை 3:00 மணியளவில் தனது வீட்டின் தென்னை மரத்தில் ஏறி மட்டையை வெட்டினார். அப்போது, மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி மரத்திலிருந்து கீழே விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி