திருவெண்ணைநல்லூரில் விவசாயிகள் கால்நடைகளுடன் சாலை மறியல்

54பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசெவலை கிராமத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தாலும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இந்த கிராமத்தின் பிரதான தொழிலாகும். இந்நிலையில் இங்குள்ள கால்நடைகளுக்கு போதிய மருத்துவ வசதி இல்லை என்றும். கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க 10 கிலோமீட்டர் அப்பால் உள்ள டி. எடையாரிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளை நடந்தே ஓட்டி செல்ல வேண்டும். எனவே இந்த கிராமத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் இந்த கிராமத்தில் கால்நடை கிளை மருந்தகம் அமைக்கப் பட்டுள்ளது என்றும் கால்நடை மருந்தகம் அமைக்கும் அளவிற்கு போதிய கால்நடை எண்ணிக்கை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் இருப்பதாகவும், அவசர காலத்திற்கு நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை மருந்தகத்திற்கு ஓட்டி சென்றால் அங்கு கால்நடை ஆய்வாளர் அங்கே இருப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை பெரியசெவலை கடலூர்-சித்தூர் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி