திருக்கோவிலுார் அடுத்த வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நேற்று காலை விவசாய கிணற்றில் மான் தவறி விழுந்து வெளியில் வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் திருக்கோவிலுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து சென்று மானை உயிருடன் மீட்டனர். இரண்டு வயதுடைய ஆண் புள்ளிமான் என தெரியவந்தது. மீட்கப்பட்ட மான் பத்திரமாக வனத்தில் விடப்பட்டது.