அரகண்டநல்லூர் அருகே மீன் பிடிக்க சென்ற இறப்பு

60பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது அந்திலி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரது மகன் ஆதிகேசவன் 34 என்பவர் இன்று மாலை 5 மணியளவில் அதே பகுதியில் உள்ள குளத்தில் இன்று மீன் பிடிப்பதற்காக வளையுடன் இறங்கியதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கியுள்ளார்.

இந்நிலையில், வெகு நேரமாகியும் ஆதிகேசவன் வெளியே வராததால் செய்வதறியாதை தவித்த உடன் இருந்தவர்கள் திருக்கோவிலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் குளத்தில் மூழ்கிய ஆதிகேசவனை 4 மணி நேர தேடுதலுக்குப் பின்னர் சடலமாக கண்டெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆதிகேசவன் உடலை கைப்பற்றிய அரகண்டநல்லூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ஆதிகேசவனுக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி