கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, நவீன தகன மேடையை, ரோட்டரி சங்கம் சார்பில் முழுமையாக ஏற்று நடத்துவதற்காக சில மாதங்களுக்கு முன்பு ஆலோசிக்கப்பட்டது. இதனை அடுத்து திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் திவ்யா மற்றும் நகர மன்ற தலைவர் முருகன் ஆகியோர் நவீன தகன மேடையினை ஏற்று நடத்துவதற்கான ஆணையினை இன்று திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் செந்தில்குமார், செயலாளர் கோத்தம் சந்த், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் எஸ். எஸ். வாசன் ஆகியோரிடம் வழங்கினர். இந்த நிகழ்வில் உடன் நகராட்சி பொறியாளர் ஜெய்பிரகாஷ்நாராயணன் மற்றும் முன்னாள் துணைத் தலைவர் குணா, நகர மன்ற உறுப்பினர் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.