ராணிப்பேட்டை: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. V கிரண் ஸ்ருதி இ. கா. ப. , பரிந்துரையின் பேரில் வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நெமிலியை சேர்ந்த குற்றவாளி மதன் நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.